10, Authors, அதிகம், இலக்கியம், எழுத்தாளர், கதை, கவிஞர், சரித்திரம், தலை, தொடர், நாவல், நூலகம், நூல், படைப்பாளி, பத்திரிகை, பிடித்த, புத்தகம், புனைவு, முக்கிய, வரலாறு, வாசிப்பு, Classics, Cool, Deepam, Dheepam, Fiction, History, Lists, Lit, Literary, Literature, Novel, OIG, Old, Short Story, Story, Tamil, Theepam, Vikadan, Writers
10 Most Popular & All time Favorite Tamil Writers
In Books, Lists, Literature, Magazines, Tamilnadu on ஓகஸ்ட் 12, 2009 at 9:49 பிப
- இந்தப் பட்டியல் கிடுக்கிப்பிடி எழுத்தாளர்கள் பற்றியது.
- தங்களை படிப்பவர்களை சிக்கெனப் பற்றிக் கொள்பவர்கள் இவர்கள்.
- என்ன ஆவி அடித்தாலும், புகுந்தவரை வெளியேற்றுவது இயலாது. பிறிதொரு படைப்பாளி நுழைய எத்தனித்தாலும் துரத்தியடிக்கப்படுவர்.
- தன்னுள் இருப்பவரை எதற்காக அனுப்பவேண்டும், பிறிதொருவரை ஏன் வாசிக்க வேண்டும் என்று லாஜிக்கலாக புரிய வைக்க முயன்றால், நீங்களே கீழே குறிப்பிடப்படுபவர்களுள் ஈர்க்கப்பட்டு, சுழலுக்குள் மாட்டிக்கொள்ளும் அபாயமும் உண்டு.
- ஒவ்வொருவருக்கும் ஒரு வட்டம், ஆகர்ஷணம், மயக்கம் உண்டு.
- சுஜாதா
- ரமணி சந்திரன்
- கல்கி
- மு. வரதராசன் / அகிலன் / நா பார்த்தசாரதி
- சாண்டில்யன்
- ராஜேஷ்குமார் / பட்டுக்கோட்டை பிராபகர்
- பாலகுமாரன்
- ஈ வெ ரா பெரியார் / சோ ராமசாமி
- வைரமுத்து / வாலி
- தி. ஜானகிராமன்
Like this:
Like ஏற்றப்படுகின்றது...
Related
இதில் ஜெயமோகன் பேரை காணோமே?
மு.வ./நா.பா./அகிலன் ஆகியோரை ஒரு காலத்தில் தமிழ் வாசகர்களை கட்டி வைத்தவர்களாக நினைக்கிறீர்கள் போல. ஆனால் தேவன், லக்ஷ்மி, மணியன், சிவசங்கரி போன்றவர்களும் அந்த வரிசையில் அடங்குவார்களே! நான் ரமணி சந்திரன் எழுதிய எதையும் படித்ததில்லை, ஆனால் அவர்தான் லக்ஷ்மி, சிவசங்கரி ஆகியோரின் வாரிசு என்று தோன்றுகிறது.
சமீபத்தில் சந்தித்த புத்தக வாசகரும், இந்தியாவில் திருமணத்தில் அறிமுகமானவரும் மு.வ./நா.பா./அகிலன் கொணர்ந்த ஆதர்ச நாயகனை சிலாகித்தார்கள். ‘இப்போ நீங்க சொல்லுற இ.பா., அ.மி. எல்லாருமே வேஸ்ட். அவங்க போல வருமா? “புளிய மரத்தின் கதை”யில் என்ன இருக்கு? குறியீடா… ஹ்ம்ம்… கதை அப்படியே முடிஞ்சு போகுது! ஏதாவது நடக்க வேணாம்!?’
அவர்களுக்கு என் செலவில் சில புத்தகம் வாங்கித் தந்தேன். இருந்தும் ‘சிலாக்கியமில்லை’ என்று முழுக்கவும் படித்தபிறகு, வெகு தீவிரமாக சு.ரா.வையும் ஜெயகாந்தனையும் விமர்சித்துத் தள்ளினார்கள். நான் விவாதங்களில் ஈடுபடவில்லை. ‘ம்ம்ம்’ கொட்டிவிட்டேன்.
—தேவன், லக்ஷ்மி, மணியன், சிவசங்கரி போன்றவர்களும் அந்த வரிசையில் அடங்குவார்களே! —
—இதில் ஜெயமோகன் பேரை காணோமே?—
தேவனுக்கு பெரிய நம்பிக்கையான வாசகர் வட்டம் இருந்தது. அப்புறம் பாக்கியம் ராமசாமி, சோ என்று சிதறியிருக்கும்.
லஷ்மியை அனுராதா ரமணன் பின் தொடர, தேவிபாலா அவர்களைக் கவர்ந்திழுக்கலாம். எனினும், இவ்வளவு loyal வாசகர் இருந்திருப்பார்களா?
அந்த வகையில் ஜெமோ வாசிப்பாளர்கள், நிச்சயம் எஸ்ரா, சாருவையும் படிப்பார்கள்? தனித்துவமாக, “நான் ஜெமோ மட்டும்தான் படிப்பேன்”, “எனக்கு சாருதான் உலகம்!” என்று அடைப்புட்டிருக்க மாட்டார்கள் என்பது என் அனுமானம்.
Ironic that Periyar & Cho at the same position 🙂
கார்த்திக், முன்னவருக்கு தொண்டர் படை (ரீச்?) அதிகம் 🙂
where is yuga shanthi JEYAKANTHAN?
[…] பழைய பதிவு கண்ணில் பட்டது. கிடுக்கிப்பிடி […]