3, மூன்று, Cool, Culture, Fun, Krishnan, Lists, OIG, Stuff, Tamil.net, Three
மூன்று :: Krishnan
In Blogs, Lists, Misc on ஜூலை 21, 2009 at 9:16 பிப
- சத்து , சித்து , ஆனந்தம்.
- ஆக்கல் , அளித்தல் , ஒடுக்குதல்.
- வேதம் மூன்று : இருக்கு , யஜுர் , சாமம்.
- இச்சாசக்தி , கிரியாசக்தி , ஞானசக்தி.
- இறந்த காலம் , நிகழ்காலம் , எதிர்காலம்.
- ஆற்றுநீர் , ஊற்றுநீர், மழைநீர் [முந்நீர்]
- அயன் , அரி ,அரன்.
- ஆன்மதத்துவம், வித்தியாதத்துவம், சிவத்தத்துவம்.
- பாசஞானம் , பசுஞானம், பதிஞானம்.
- இதிகாசம் மூன்று : சிவரகசியம், இராமாயணம், மகாபாரதம்.
- அக்கினி மூன்று : ஆகவானீயம் , காருகபத்யம் , தாட்சிணாக்கியம்.
- மண் ,பொன்,பெண்.
- பதி ,பசு , பாசம்.
- ஆணவம், கன்மம், மாயை.
- [முப்பால் ] அறம், பொருள், இன்பம்.
- இயல் ,இசை, நாடகம்
- தூலம் ,சூக்குமம்,கரணம்.
- மூலம், நடு, முடிவு.
- சாத்துவம்,ராசஸம், தாமஸம்.
- இகம், பரம், வீடு.
- தொகை, வகை,விரி.
- முதனூல்,வழிநூல், சார்புநூல்.
விட்டுப்போன சில மூன்றுகள்:
சுவீட், காரம், காப்பி
அதன் பின்னர் வரும்,
கபம், வாதம், பித்தம்
நாலான சில மூன்றுகள்:
>வேதம் மூன்று : இருக்கு , யஜுர் , சாமம்.
>
எனது பக்கத்து வீட்டு திரிவேதி, அதர்வணம் தெரிந்த ஒரு சதுர்வேதி எமகாதகன்.
>இறந்த காலம் , நிகழ்காலம் , எதிர்காலம்.
>
இத்துடன் நல்லகாலம் என்றும் ஒன்று வருது என்று இணையத்து குடுகுடுப்பாண்டி
ஒருமுறை சொன்னதாக ஞாபகம்.
உலக அமைதிக்காகப் பாடுபடும்
சாந்த சொரூபன் தகர டப்பா
Like this:
Like ஏற்றப்படுகின்றது...
Related