Source: இரமணி (ஜூன் 2000)
அண்மைக்காலங்களில் (என்பது முழுப்பொய்; கடந்த பத்து வருடங்களாக) புதினங்கள், சிறுகதைத்தொகுதிகள் படிக்கும் வாய்ப்பு பெருமளவிலே கைவசமாகக் காணேன்.
ஆகையினால், என்து பட்டியல் முன்னைப் பழமையின் புதினத்தொகுப்பே 😦 (இந்தியாவினைக் களமாகக் கொண்ட எழுத்தாளர்களின் படைப்புகள் மட்டுமே இங்கே தந்துள்ளேன்) (முதலாவதினைத் தவிர்த்து மிகுதி விருப்பின் ஒழுங்கிலே இல்லை)
1. காகிதமலர்கள் :- ஆதவன்
2. குருதிப்புனல்:- இந்திரா பார்த்தசாரதி
3. உயிர்த்தேன்:- தி. ஜானகிராமன்
4. நாளை மற்றுமொரு நாளே:- ஜி. நாகராஜன்*
5. தலைமுறைகள்: நீல பத்மநாபன்
6. புத்தம் வீடு: ஹெப்சிபா ஜேசுதாசன்.
7. சாய்வு நாற்காலி:- தோப்பில் மீரான்
8. கடலுக்கப்பால்:- ப. சிங்காரம்
9. ஒரு மனிதன், ஒரு வீடு, ஒரு உலகம்:- ஜெயகாந்தன்#
10. கோபல்லபுரத்து மக்கள்:- கி. ராஜநாராயணன்