Snapjudge

Therthal 2009 Special

In India, Politics, Tamilnadu on மார்ச் 18, 2009 at 3:11 பிப

தேர்தல் குறித்து நான் அறிந்தவரைக்கும் நான்கு பதிவுகள்தான் தேறுகிறது.

இப்போது புதிய பதிவு தொடங்குவதற்கான ஐடியா:

  1. தினம் ஒரு வினா: அன்றைய சூடான பிரச்சினையை கேள்வியாக மாற்றி, இரு தரப்பு விவாதத்தையும் இரண்டு வரிகளில் சுருங்கச் சொல்லி, வாசகரை வாக்களிக்க சொல்வது. மாலன் இதை செய்கிறார் என்றாலும் ஒவ்வொரு நாளும் பரபரப்பாக இதைத் தொடரவில்லை.
  2. புகைப்படமும் செய்தித் தொகுப்பும்: செய்திகளுக்கு கூகிள், தினமலர், யாஹூ, எம்.எஸ்.என் எல்லாம் இருக்கிறது. நிழற்படம் எளிதில் கிடைப்பதில்லை. தினசரி நிகழ்வுகளை பருந்துப் பார்வை செய்தித் தொகுப்பாக்கி, கூடவே முக்கியமான, அரிதான ஒளிக்கோர்வைகளை சொடுப்பது.
  3. குசும்பு கருத்து கார்ட்டூன்: திருமாவும் கருணாநிதியும் என்ன பேசிக் கொண்டிருப்பார்கள்? விஜய்காந்த்தும் ரஜினியும் சேர்ந்திருக்கும் பழைய படத்திற்கு உங்கள் எண்ணச்சிறகு எப்படி பறக்கும்? குசும்பர் செய்கிறார் என்றாலும், எக்ஸ்க்லூசிவாக இந்திய தேர்தல் களத்திற்கு செய்வது.
  4. அன்றும் இன்றும்; சொன்னார்கள்; துக்கடா: இன்றைக்கு ஒரு அறிக்கை விடுவது; அது என்றோ சொன்னதற்கு நேர் எதிராக இருப்பது அரசியல் லட்சணம். அந்த மாதிரி முரண்களை முன்னிறுத்துவது. பொருத்தமான மேற்கோள்களுக்கு, பதிலாக கருத்துக்கணை ரெண்டணா வீசுவது.
  5. எண்ணும் புள்ளிவிவரமும்: ‘ரமணா’ விஜய்காந்த் மாதிரி ஒவ்வொரு தொகுதிக்கும், ஒவ்வொரு வேட்பாளருக்கும், அனைத்து கட்சிகளுக்கும் பின்புல தகவல்களை சுவையாகக் கொடுப்பது. எத்தனை முறை குற்றஞ்சாட்டப்பட்டார்? எவ்வளவு தடவை தொகுதிக்கு விசிட் அடித்தார்? வாக்கு விகிதாச்சாரம்?
  6. பேட்டி, நேர்காணல், வல்லுநர் பார்வை: விடுதலை சிறுத்தை இரவிக்குமார் துவங்கி பா.ஜ.க. பிரதம வேட்பாளர் அத்வானி வரை வலையில் வசிப்போரே. அவர்களிடம் இமெயில் பேச்சுவார்த்தை நடத்துவது. முன்னாள் எம்பி, அதிருப்தி எம்.எல்.ஏ என்று வலை வீசி சிறப்புக் கட்டுரை வாங்குவது; தமிழிணைய தாதாக்களிடம் கிடுக்கிப் பிடி இன்டெர்வ்யூ பெறுவது.
  7. தேர்தல் அறிக்கை ஆராய்ச்சி, ஆய்வு: “கெட்டதெல்லாம் கெட்டது. இலவச டிவி கிழவனைத் தூக்கி மனையில் வை” என்கிற மாதிரி 55 கெட்ட விவாத துவக்க புள்ளிகளை விக்கி பட்டியலிட்டிருக்கிறது. மலிவு அரசியலை விட்டுவிட்டு சமூகம் எதிர்நோக்கும் விஷயங்களில் கட்சி நிலைப்பாடுகளையும் வேட்பாளரின் பாராளுமன்ற நடவடிக்கையையும் அரசின் செயல்பாடுகளையும் அலசுவது.
  8. ஆங்கில ஊடகம், மாற்று பத்திரிகை, பிற தினசரி: Covert, Tehelka போன்ற பத்திரிகைகளின் தலையங்கம் என்ன? டெலிகிராஃப், ஸ்டேட்ஸ்மேன், TOI, HT என்ன சொல்கிறது? ஈநாடு, ஆனந்த பஜார் பத்ரிகாவில் என்ன முக்கியமான மேட்டர்? அவுட்லுக், சன்டே இந்தியன், வீக், இந்தியா டுடே எல்லாம் என்ன எழுதி உள்ளது?
  9. தகவல் சரிபார்த்தல்; பிழைபொறுக்கி: நம் தலைவர்களிடம் நேர்மையை எதிர்பார்ப்பது கஷ்டம். இலவச அரிசிக்கு எவ்வளவு செல்வாயிற்று? யார் காலத்தில் மின்சாரம் எவ்வளவு கட் ஆனது? எப்போது எந்த நிலையை எவர் ஆதரித்தார்? சொன்னது சரிதானா என்று பூதக்கண்ணாடி வைத்து குற்றங்கண்டுபிடிப்பது.
  10. யூ ட்யூப், ஃப்ளிக்கர், வலைப்பதிவு தொகுப்பான்: எல்லா சோஷியல் மீடியாவிடமிருந்தும் பொருத்தமான இடுகையை ஒத்த தலைப்பில் சேர்த்துக் கொடுப்பது. வேட்பாளரை நேரில் சந்தித்து விழியமோ, புகைப்படமோ வலையேற்றும் கலையைக் கற்றுத் தருவது.
  11. கொசுறு தமிழ் ஆனியன்: ஆங்கில ஆனியன் பார்த்திருப்பீர். லக்கிலுக் போன்றோர் அவ்வப்போது எழுதும் ஒன்றரை பக்க நாளேடு படித்திருப்போம். அன்றாட செய்திகளை நக்கலெடுப்பதே முழு நேரத் தொழில். புகைப்படங்களை வெட்டி ஒட்டுதல், போலி பேட்டி, நிஜ அறிக்கை போன்றே தோன்றும் பகிடி, கிட்டத்தட்ட நம்பிவிடக் கூடிய கிண்டல் உல்டா நிறைப்பது.
  1. […] பதிவரோ சூடான இடுகைக்கு செய்தி இட்லியும் அலசல் வடையும் […]

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: