Quotable Quotes :: சொன்னாங்க! சொன்னாங்க
அறிஞர் அண்ணா
1. ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்.
2. சட்டம் ஒரு இருட்டறை, வக்கீலின் வாதம் ஒரு விளக்கு.
வீரபாண்டிய கட்டபொம்மன்
திறை கட்டாமை குறித்து வீரபாண்டியனைக் குற்றம் சுமத்திய ஜக்சன் துரையை நோக்கி வீரபாண்டியன் கூறியது:
3. “வரி, வட்டி, திறை, கித்தி. எங்களோடு வயலுக்கு வந்தாயா? ஏற்றமிறைத்தாயா? நீர் பாய்ச்சி நெடுவயல் நிறையக் கண்டாயா? அங்கே கொஞ்சி விளையாடும் எங்குலப் பெண்களுக்கு மஞ்சளரைத்துக் கொடுத்தாயா? மாமனா? அல்லது மச்சானா? யாரைக் கேட்கிறாய் வரி, எவரைக் கேட்கிறாய் வட்டி!?”
கலைஞர் கருணாநிதி
நேரு காலத்தில் சோசலிசம் பேசிய காங்கிரஸின் பிற்காலத்திய “பரிணாம” வளர்ச்சியைக் கிண்டலடித்து 92ல் அவர் எழுதிய கவிதை
4. “திருப்பதியில் காங்கிரசு மாநாடு
ஆவடியில் மொட்டாக வெடித்த சோஷலிசம்
ஆண்டவன் சந்நிதியில் மொட்டையாக நின்றது”
சட்டசபையில் திராவிடநாடு பற்றிய ஒரு கேள்வியை எழுப்பினார் காங்கிரஸின் அனந்தநாயகி. இவரின் பதில்:
5. ‘நாடாவைக் கழற்றி பாவாடையை தூக்கிப் பார். அங்கே தெரியும்’
பா.ம.க. இராமதாஸ்
6. ‘இன்றைக்குத் தமிழ்நாட்டுல எந்தக் கட்சி கொள்கைக்காக நடக்குது? எங்கள் கட்சி உள்பட. எல்லாத்துக்குமே அரசியல் ஆதாயம் ஒண்ணுதான் அடிப்படை’
7. ‘அய்ந்தும் மூன்று எட்டு; அரசியல்வாதியை வெட்டு!’
ஸ்ருதி கமல்ஹாசன்
8. ‘அப்பா இப்போ நிறைய கவிதைகள் எழுதுறார். வீட்டில் இரவு நேரத்தில் ஆளாளுக்கு பேப்பர் வெச்சுக்கிட்டு நாங்க கவிதைக்காக யோசிப்பதைப் பார்ப்பதே அழகாக இருக்கும்!’
குஷ்பு
9. “பெண்கள் திருமணமாகும்போது கன்னித்தன்மை கலையாமல் இருக்க வேண்டும் என்பதுபோன்ற எண்ணங்களிலிருந்து நமது சமூகம் விடுதலையாக வேண்டும். கல்வி பெற்ற எந்த ஆண்மகனும் தான் திருமணம் செய்யப் போகிறவள் கன்னித்தன்மையோடு இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்க மாட்டான். ஆனால் திருமணத்திற்கு முன்பு செக்ஸ் வைத்துக் கொள்ளும்போது கர்ப்பமாகமாலும் பால்வினை நோய்கள் வராமலும் பெண் தன்னை தற்காத்துக் கொள்ளவேண்டும்” – இந்தியா டுடே
விகடனில் வந்த நாஞ்சில் நாடனின் சிறப்புப் பேட்டி.
10. “தமிழ் எழுத்தாளனுக்கு அரசியல் பற்றி அச்சம் இருக்கு. எலுமிச்சம் பழம் புளிக்கும்னு தமிழ் எழுத்தாளனுக்கும் தெரியும். ஆனால், புளிக்குன்னு எழுத்தில் ‘கமிட்’ பண்ண இவன் ஏழு நாட்கள் யோசிக்கிறான். அதனால எதாவது பாதிப்பு, கெடுதல் வருமா? ஒருவேளை எலுமிச்சம் பழம் இனிப்பா இருந்துட்டா; நாம சொல்றது தப்பா போயிடுமோன்னு இவனுக்கே உறுதி இல்லை. எல்லோரையும் மாதிரி பாதுகாப்பா, சௌகரியமா இருந்துட்டுப் போயிருவோம்னு நினைக்கிறான். ஆனால், இப்படி பாதுகாப்பை நினைச்சு கவலைப்படுபவன் எப்படி சுதந்திரமான எழுத்தாளனா இருக்க முடியும்?” – திருட்டு வி.சி.டி விற்றால் திருட்டு, என் கதையிலிருந்து எடுத்தால்?