Snapjudge

Thalavai Sundaram: Top 10 Books: Year in Review

In Books, Lists, Magazines on ஜனவரி 14, 2009 at 5:39 பிப

31.12.08   தொடர்கள்
நினைவிற்கு எட்டியவரை  ஓர் அரசியல் சுயசரிதை   ஜோதிபாசு; தமிழில்: வீ.பா. கணேசன்

தொடர்ந்து ஐந்து முறை வெற்றிபெற்று 23 ஆண்டுகள் மேற்குவங்கத்தில் முதலமைச்சராக  இருந்த கம்யூனிஸ்ட் தலைவர் ஜோதிபாசுவின்  சுயசரிதை.

வெளியீடு: பாரதி புத்தகாலயம், 421, அண்ணாசாலை, தேனாம் பேட்டை, சென்னை-21. விலை ரூ.200.

நான் வித்யா  லிவிங் ஸ்மைல் வித்யா
ஆணாகப் பிறந்து பெண்ணாக மாறிய ஒரு திருநங்கையின் பகிரங்க வாக்குமூலம்.
வெளியீடு: கிழக்கு பதிப்பகம், 33/15 எல்டாம்ஸ் சாலை, ஆழ்வார் பேட்டை, சென்னை-18. விலை ரூ.100.

கனவு மெய்ப்பட வேண்டும்    தமிழருவி மணியன்

பாரதி மீது வைக்கப்படும் பல்வேறு விமர்சனங்களுக்கு தனக்கேயுரிய எளிமையான நடையில் பதில் சொல்கிறார் தமிழருவி மணியன்.

வெளியீடு: தென்திசை பதிப்பகம், 52 தென்மேற்கு போக் ரோடு, தி. நகர், சென்னை-17. விலை ரூ.100.

மேயோ கிளினிக் உடல்நலக் கையேடு – பதிப்பாசிரியர்: சிவசுப்ரமணிய ஜெயசேகர்

கிட்டத்தட்ட எல்லா நோய்களைப் பற்றியும் சுருக்கமான குறிப்புகளைத் தருவதுடன் எப்பொழுது டாக்டரை பார்க்க வேண்டும், என்னென்ன சுய தடுப்பு முறைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதையும் விவரிக்கும் மருத்துவ நூல்.

வெளியீடு: அடையாளம், 1205/1 கருப்பூர் சாலை, புத்தா நத்தம்_ 621310. விலை ரூ.250.

ஒபாமா –  செ.ச. செந்தில்நாதன்

பராக் ஒபாமாவின் வாழ்க்கை வரலாறு. ஒபாமாவின் அரசியல் நிலைப்பாடுகளை விவரிப்பதுடன், உலக அரசியல் குறித்து அவர் எழுதிய நூலில் இருந்து சில பகுதிகள் மொழிபெயர்த்தும் தரப்பட்டுள்ளன.

வெளியீடு: ஆழி பப்ளிஷர்ஸ், 12 முதல் பிரதான சாலை, யுனைடெட் இந்தியா காலனி, கோடம்பாக்கம், சென்னை-24. விலை ரூ.60.

கதை நேரக் கதைகள் –  பாலு மகேந்திரா

பாலுமகேந்திராவின் கதை நேரக் கதைகள் தொடரில் வந்த ஆறு சிறுகதைகள், அதன் திரைக்கதை வடிவங்கள், ஆறு குறும்படங்களின் டி.வி.டி. மூன்றும் கலந்த ஒரு `பேக்’ இந்தப் புத்தகம்.

வெளியீடு: வம்சி புக்ஸ், 19 டி.எம்.சரோன், திருவண்ணாமலை-1. விலை ரூ.150.

நடந்தாய் வாழி காவேரி தி.ஜானகிராமன், சிட்டி

தமிழில் எழுதப்பட்ட பயண அனுபவங்களிலேயே மிகச் சிறந்தது எனக் குறிப்பிடப்படும்  புத்தகம்.  தலைக்காவிரி தொட்டு பூம்புகார் வரைக்கும் காவிரிக் கரையோரமாக பயணம் செய்து எழுத்தாளர்கள் சிட்டியும் தி.ஜாவும்  எழுதியிருக்கிறார்கள்.
வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம், 669 கே.பி.சாலை, நாகர்கோவில்.விலை ரூ.225.

யாமம் எஸ். ராமகிருஷ்ணன்

சென்னையின் நூற்றைம்பது வருடத்துக்கு முந்தைய சரித்திரத்தை அடிப்படையாகக் கொண்ட வரலாற்று நாவல்.  குறிப்பிடும்படியாக வேறு இலக்கிய நாவல்கள் எதுவும் இந்த வருடம் வராததால் தனிக்காட்டு ராஜாவானது யாமம்.

வெளியீடு: உயிர்மை, 11/29 சுப்ரமணியன் தெரு, அபிராமபுரம், சென்னை-18. விலை ரூ.225.

குற்றமும் தண்டனையும் தஸ்தயேவ்ஸ்கி; தமிழில்: எம்.ஏ. சுசிலா
உலகின் முதல் ஐந்து சிறந்த நாவல்களில் ஒன்றாக குறிப்பிடப்படும் ரஷ்ய எழுத்தாளர் தஸ்தயேவ்ஸ்கி நாவலின் மொழிபெயர்ப்பு. வெளியாகி நூறு வருடங்களைக் கடந்துவிட்ட பிறகும், இன்றும் படிக்க புதிதாக இருப்பதே இதன் சிறப்பம்சம்.

வெளியீடு: பாரதி புக் ஹவுஸ், டி-28 மாநகராட்சி வணிக வளாகம், பெரியார் பேருந்து நிலையம், மதுரை-1. விலை ரூ.500.

சிலப்பதிகாரம்: எல்லோர்க்குமான எளிய உரையுடன் ப. சரவணன்பண்டிதர்கள், ஆய்வாளர்கள், அறிஞர்கள் போன்றோரால்தான் படித்து புரிந்துகொள்ள முடியும் என்பதில்லாமல்  சாமான்யர்களும் படித்து ரசிக்கத்தக்க வகையில் எழுதப்பட்ட சிலப்பதிகார உரை.

வெளியீடு: சந்தியா பதிப்பகம், நியூடெக் வைபவ், 57-53வது தெரு, அசோக் நகர், சென்னை-83. விலை ரூ.250.

-தளவாய் சுந்தரம்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: