07.01.09 தொடர்கள் |
தங்களின் அதிரடியான சாதனைகள் மூலம் 2008ல் ஜொலித்த டாப் 10 நட்சத்திரங்கள் யார்? யார்? ஒரு குட்டி ஃப்ளாஷ்பேக்.
1.அபினவ் பிந்த்ரா 28 வருடங்கள் கழித்து தனிநபர் போட்டியில் ஒலிம்பிக் தங்கப் பட்டியலில் இந்தியாவையும் இடம்பெறச் செய்தவர். 2.சந்திராயன் அண்ணாதுரை நிலவுக்கு விண்கலம் செலுத்தி இந்தியாவையே அண்ணாந்து பார்க்க வைத்துவிட்டார் இந்த கிராமத்து அண்ணாதுரை. 3.அரவிந்த் அடிகா `ஒயிட் டைகர்’ நாவல் மூலம் உலகிலேயே சிறந்த ப 4.ஷீலா தீட்சித் டெல்லியில் மீண்டும் ஜெயித்து ஹாட்ரிக் படைத்துள்ளார். தேறுவோமா என்று இவர் கட்சியின் தலைமை குழம்பியிருந்த வேளையில் கொஞ்சம் நம்பிக்கையை ஏற்படுத்தியவர். 5.பார்வதி ஓமனக் குட்டன் உலக அழகிப் போட்டியில் இவருக்கு இரண்டாம் இடம். இனி இந்தியர்கள் நெஞ்சில் நீங்கா இடம். தேர்வுக் குழுவினர் தவறு செய்துவிட்டார்கள் என்று சொன்ன போல்டு மங்கை. 6.டோனி ஆஸ்திரேலியா, இங்கிலாந்து என உலக அணிக்கே தண்ணி காட்டிய இந்திய ரசிகர்களின் மாவீரன். இவருக்கு இந்த ஆண்டு ராஞ்சியில் கோயில் கட்டுவதற்கு வேலை நடக்கிறதாம். 7.ப்ரியாமணி பருத்திவீரனுக்குப் பின் பட்டி தொட்டியெல்லாம் முத்தழகு பேச்சு தான். அச்சு அசலாக கிராமத்துப் பெண்ணாக வந்து ஜனாதிபதி விருதை தட்டிச் சென்றார். 8.சுப்ரமணியபுரம் சசிகுமார் அடிமைப்பெண் சினிமா போஸ்டர், கோலி குண்டு சோடா, வெள்ளை பெயிண்ட் பஸ், பெல்பாட்டம் பேண்ட், பெரிய காலர் சர்ட் என 1980-ஐ கண் முன் நிறுத்தி 2008-ல் ஜெயித்தவர். 9. சான்யா நெய்வால் பாட்மிட்டனில் உலகளவில் டாப் 10ல் தானும் ஒருவராக மின்னுகிறவர். இந்த ஆண்டு டாப் 10ல் முதலிடம் பெற நாம் அனைவரும் வாழ்த்துவோம். 10.ஹிதேந்திரன் இறந்தபிறகும் வாழ்கின்ற பெயர். ரத்ததானம் கொடுக்கவே யோசிக்கிற நேரத்தில் இவரது உறுப்புதான தர்மம் மற்றவர்களுக்கு வழிகாட்டி.. – அரவிந்த் |
you must put sachin in this list
hi